அர்ச்சுனா வழங்கியுள்ள, சூடான நேர்காணல்
தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனை பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
தற்போது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, குறித்த தென்னிலங்கை தொலைக்காட்சி ஊடகத்துக்கு நேற்று(22.11.2024)வழங்கிய கருத்துக்கள் மீண்டும் பேசுபொருளாகி சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.
நாடாளுமன்றின் முதல் அமர்வில் எதிர்கட்சி தலைவருக்கு என ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்தமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் வழங்கிய பதில்களே தற்போது பேசுபொருள்கியுள்ளது.
இதன்போது இடம்பெற்ற நேர்காணல் பின்வருமாறு அமைந்திருந்தது.
கேள்வி - ஏன் எதிர்க்கட்சி தலைவரின் ஆசனத்தில் அமர்ந்தீர்கள்? அது பற்றி உங்களுக்கு தெரியாதா?
அர்ச்சுனா - அது எதிர்க்கட்சி உறுப்பினரின் ஆசனம் என எனக்கு தெரியாது. அத்தோடு அந்த சந்தர்ப்பத்தில் எவரும் எதிர்க்கட்சி தலைவராகவோ, அவருக்கு ஒதுக்கப்பட்ட ஆசனம் என்றோ எங்கும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை
கேள்வி - அவ்வாறெனில் ஏன் நேரலை காணொளியை சமூக ஊடகங்களில் வெளியிட்டீர்கள். நாடாளுமன்றத்திற்குள் தொலைபேசி அனுமதி தொடர்பான சட்டம் உங்களுக்கு தெரியாதா? எவ்வாறு கொண்டு சென்றீர்கள்?
அர்ச்சுனா - கையில்தான் தொலைபேசியை கொண்டு சென்றேன்.
கேள்வி - கையில் தான் தொலைபேசியை கொண்டுசெல்வார்கள். ஆனால் நாடாளுமன்றத்திற்குள் தொலைபேசிக்கு அனுமதி இல்லை என்ற சட்டம் தெரியுமல்லவா?
அர்ச்சுனா - யார் கூறியது அவ்வாறு? அப்படியென்றால் அங்கு தொலைபேசியை கொண்டுவந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் சென்று இந்த கேள்வியை எழுப்பவேண்டும். நீங்கள் என்னை ஒரு தீவிரவாதி போல் சித்தரிக்க என்னுகின்றீர்கள். இது உங்களுடைய நாடாளுமன்றம் அல்ல எமது நாடாளுமன்றம்.
கேள்வி - அவ்வாறில்லை. உங்களுக்கு தொலைபேசியை கொண்டு செல்ல முடியாது என்ற சட்டம் பற்றி தெரியாதா? நாடாளுமன்ற நிலையியற் கட்டளை சட்டத்தின் பிரகாரம் உங்களுக்கு எதுவும் தெரியாதா?
அர்ச்சுனா - இல்லை. அது பற்றி எனக்கு தெரியாது. அவ்வாறு என்றால் நாடாளுமன்றத்திற்கு சென்றவுடன் இது தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கவேண்டும்.
கேள்வி - நாடாளுமன்ற நிலையியற் கட்டளை சட்டங்கள் பற்றி உங்களுக்கு தெரியாதா?
அர்ச்சுனா - நான் ஒரு வைத்தியர். எனக்கு மருந்து வகைகள் பற்றி கேட்டால் அதற்கான விளக்கங்களை வழங்கமுடியும்.ஆனால் சட்டம் தொடர்பில் எதுவும் தெரியாது.
கேள்வி - இது சாதாரண மக்களுக்கும் தெரியுமல்லவா?
அர்ச்சுனா - இல்லை.. நாடாளுமன்றிற்குள் சென்று நேரலை வழங்கமுடியும் என்பதற்கு அமையவே செயற்பட்டேன்.
கேள்வி - நாடாளுமன்றில் யாருக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளீர்கள்?
அர்ச்சுனா - ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தரப்புக்கே எனது ஆதரவு.
கேள்வி - அவ்வாறு என்றால் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டிருக்கலாம் அல்லவா?
அர்ச்சுனா - இல்லை அவ்வாறு இல்லை அநுரகுமார திசாநாயக்க அனைத்து மக்களையும் சமமாக பார்க்கின்றார். பெரும்பான்மை சமூகத்திற்கு மாத்திரம் அவர் ஆதரவளிப்பார் என்றால் நான் ஒருபோதும் ஆதரவு வழங்க மாட்டேன்.
தென்னிலங்கை அரசியலை “கப்புடாஸ்’’ தலைமையிலான குழு நாசம் செய்ததை போலவே எமது மக்களையும் தமிழ் அரசியல்வாதிகள் வைத்து பிழைப்பு நடத்தியுள்ளனர். இது மாறவேண்டும். அதற்காகவே இந்த நிலைப்பாடு.
Post a Comment