Header Ads



ஒஸ்மானிய ஆட்சியில் யூதர்களுக்காக ஒதுக்கப்பட்ட, சிறிய குடியிருப்புப் பகுதியே டெல் அவிவ்


இன்றைய ஆக்கிரமிப்பு இஸ்ரவேல் அரசின் தலைநகராக திகழும் டெல் அவிவ் நகரானது، அபகரிக்கப்பட்ட 14 பாலஸ்தீனிய கிராமங்களால் ஒன்றிணைக்கப்பட் ஒரு மாநகராகும். 


பழமைவாய்ந்த பாலஸ்தீன நகரான யாபா (Jafa - يافا) நகரின் ஒரு சுற்றுப்புறமாகவே டெல் அவிவ் இருந்தது. உண்மையில் இந்த இடம் 1909 - 1910 காலப் பகுதியில் ஒஸ்மானிய ஆட்சியின் போது யூதர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஒரு சிறிய குடியிருப்புப் பகுதியாக இருந்தது. 


பின்னர் 1948 ல் நிகழ்ந்த (நக்பா) பேரவலத்தைத் தொடர்ந்து யாபா நகரில் குடியிருந்த யூதர்கள் தவிர்ந்த, முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள், அரபுகள், அரபுகள் அல்லாத அனைத்து பூர்வீக பாலஸ்தீன குடிகளும் வலுக்கட்டாயமாக துரத்தப்பட்ட பி்ன்னர் பெரும்பாலான யாபா நகர் பகுதிகளை 1949 ஆம் ஆண்டு, ஆக்கிரமிப்பு இஸ்ரேல் அரசு டெல் அவீவுடன் இணைத்தது.


கடற்கரை நகராகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வணிக நகராக கருதப்படும் யாபா நகரை கி. மு நான்காம் நூற்றாண்டில் குடியேறிய கானானியர்களே கட்டியமைத்தனர். 


பாலஸ்தீனின் கலாச்சார தலைநகராக திகழ்ந்த இந்த நகரின் பாரம்பரிய சின்னங்களையும், முதுசங்களையும் வரலாற்று தடயங்களையும் யூத ஸியோனி அமைப்புகள் 1949 இடித்து அழித்தோடு மொத்தமாக அதனை யூதமயப்படுத்தியது. 


✌🇵🇸✌🇵🇸✌🇵🇸

✍ தமிழாக்கம் / imran farook

No comments

Powered by Blogger.