கழுத்தை அறுத்து ஒருவர் கொலை, மற்றொருவர் கழுத்தை துண்டித்து தற்கொலை
தனமல்வில - அரம்பேகெம பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடைய நபரே, இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார் என, பொலிஸார் தெரிவித்தனர்.
பெண் ஒருவருடன் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
படுகொலை செய்யப்பட்ட நபர் கடந்த 18ஆம் திகதியில் இருந்து காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
2
கொழும்பில் விகாரை ஒன்றின் மலசலகூடத்தில் இருந்து கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் கொழும்பிலுள்ள விகாரையின் மலசலகூடத்தில் கழுத்தை அறுத்துக் கொண்டு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் அனுராதபுரம் பல்கலைக்கழகத்தில் இலத்திரனியல் தொழில்நுட்பம் படித்துள்ளார். 25 வயதுடைய இந்த மாணவன் அனுராதபுரம், றம்பேவே கெந்தேவ, கோணகும்புக்வெவ பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
மருதானையிலுள்ள தனியார் நிறுவனமொன்றில் இலத்திரனியல் தொழில்நுட்பம் தொடர்பான நடைமுறை பயிற்சிகளை பெற்றுக்கொள்ள குறித்த மாணவன் கொழும்பு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பயிற்சி முடியும் வரை, ஜம்பட்டா வீதியில் உள்ள ஒரு விகாரையின் தங்கும் அறையில் தங்கியிருந்துள்ளார்.
அங்கு வந்த மாணவர் பொதுக் கழிப்பறைக்குச் சென்றுள்ளார், நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால், விகாரையின் நிர்வாகிகள் விடுதியில் தங்கியிருந்த மற்றவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
கழிவறை கதவு திறக்காததாலும், உள்ளே இருந்து சத்தம் கேட்காததாலும் இது குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் அதிகாரிகள் அங்கு வந்து கதவை உடைத்தனர். விசாரணையில், அவர் கழுத்தை தானே அறுத்துக் கொண்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கழுத்தை அறுப்பதற்கு பயன்படுத்திய கத்தியும் கழிவறையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
கழிவறை கதவு உட்புறம் பூட்டியிருந்தமையினால், மூன்றாம் நபரின் தலையீடு இருக்க வாய்ப்பில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் மாணவன் உயிரை மாய்ப்பதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
Post a Comment