Header Ads



மழை பெய்வதற்கு முன்பு வாக்களிக்கவும்


 2024 பாராளுமன்ற தேர்தலுக்காக நுவரெலியா மாவட்டத்தில் 534 வாக்களிப்பு மையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகியுள்ளதாகவும் இதுவரை 20 % மக்கள் வாக்களித்துள்ளதாகவும் நுவரெலியா மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் நந்தன கலபட தெரிவித்தார்.


நுவரெலியா மாவட்டத்தின் சில பகுதிகளில் புதன்கிழமை (13) இரவு முதல் நிலவி வரும் மழையுடன் கூடிய  சீரற்ற காலநிலையால் பல சிரமங்கள் ஏற்பட்டதாகவும் , மீண்டும் மழை பெய்வதற்கு முன்பு வாக்களிக்குமாறும் அவர் மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments

Powered by Blogger.