Header Ads



தற்போதுள்ள பிரச்சினை, சுதந்திரமாகச் செயற்பட்டு, தீர்மானங்களை மேற்கொள்ள முடியாததாகும்


 எரிபொருள் விநியோகம் தொடர்பில் ஏனைய நிறுவனங்களுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கைகள் காரணமாக விலை திருத்தம் தொடர்பில் சுயாதீனமான தீர்மானங்களை மேற்கொள்ள முடியாது என இலங்கை பெற்றோலிய  கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.


இன்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அதன் தலைவர் டி.ஜே.ராஜகருணா இவ்வாறு தெரிவித்தார்.


அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,


"விலை சூத்திரம் இல்லாமல் இருந்தால் எரிபொருள் அரசியல் தேவையின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படும்.  தேர்தல் வரும்போது விலை குறைக்கப்பட்டு மீண்டும் மாற்றப்படுகிறது.  மீண்டும் மாறுகிறது. இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் அரச வங்கிகளில் 03 பில்லியன் வரை கடன்களை வைத்திருந்தது. ஏனெனில், கொண்டு வந்த விலையை விட குறைந்த விலைக்கு விற்கப்பட்டுள்ளது. 


"இந்த விலை சூத்திரம் சரியாக செயற்படுத்தப்பட்ட பின்னர், கடந்த ஆண்டு 120 பில்லியன் இலாபம் என்று நினைக்கிறேன். இதுவரை கூட்டுத்தாபனத்திற்கு 27 பில்லியன் இலாபம் கிடைத்துள்ளது."


“இதன் விளைவாக அரசியல் தலையிட்டு இதனை நியாயமான முறையில் நடைமுறைப்படுத்தாததால் பெற்றோலியத்தால் இதனை முன்னெடுக்க முடியாது என நாட்டில் ஒரு கருத்து நிலவியது. இதன் காரணமாகவே ஏனைய நிறுவனங்கள் இலங்கைக்கு அழைக்கப்பட்டன.


​தற்போது எமக்கு உள்ள பிரச்சினை,  எமக்கு சுதந்திரமாகச் செயற்பட முடியாமல் போயுள்ளது. தற்போது, ​​சந்தையில் மற்ற நிறுவனங்களும் உள்ளன. அவர்களுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின்படி, 2022 முதல், இதே விலை சூத்திரத்தை அந்த நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன.

No comments

Powered by Blogger.