Header Ads



சர்வதேச பலஸ்தீன ஒருமைப்பாட்டு தினம் - பேதங்களை மறந்து திரண்ட அரசியல்வாதிகள்


சர்வதேச பலஸ்தீன ஒருமைப்பாட்டு தினம் இன்று(29) அனுஷ்டிக்கப்படுகிறது. 


இதனை முன்னிட்டு இலங்கை பலஸ்தீன் ஒரு­மைப்­பாட்டு இயக்கம் ஏற்­பாடு செய்­த நிகழ்வு கொழும்பு 07 இல் அமைந்துள்ள லக்‌ஷ்மன் கதிர்காமர் நிறுவன கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது. 


முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் சிங்கள மொழியில் எழுதிய “பலஸ்தீனம்” எனும் நூல் இங்கு உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டது. முதற் பிரதி பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்க்கு நூலாசிரியரால் வழங்கி வைக்கப்பட்டது. 


இந்நிகழ்வில், அமைச்சர் பிமல் ரத்நாயக்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கைக்கான ஐநா வதிவிட பிரதிநிதி Marc-Andre Franche, பிரதி சபாநாயகர் மொஹமட் ரிஸ்வி சாலி, தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முளவ்பர், இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணதசகர, முன்னாள் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், அரபு நாட்டு தூதுவர்கள், வெளிநாட்டு தூதுவர்கள், அதிதிகள் என பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.  





No comments

Powered by Blogger.