Header Ads



திங்களன்று புதிய அமைச்சரவை நியமனம், புதிய எம்.பிகளுக்கு விசேட செயலமர்வு


புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை, எதிர்வரும் திங்கட்கிழமை (18) நியமிக்கப்படும் என, தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.


இதன்படி 25 பேருக்கும் குறைவான அமைச்சரவையொன்று நியமிக்கப்படும் என, தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனதா விமுக்தி பெரமுனவின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.


10வது பாராளுமன்றத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான விசேட செயலமர்வு எதிர்வரும் 25, 26 மற்றும் 27ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக, பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவித்தார்.


இதன்போது, நாடாளுமன்ற முறை, பேரவையின் பணிகள், குழுக்களின் பணிகள் குறித்து விளக்கமளிக்கப்படும் என்றார்.


மேலும், 10வது பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட எம்.பி.க்களின் பதிவு எதிர்வரும் 18, 19 மற்றும் 20ஆம் திகதிகளில் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெறவுள்ளது.


அந்த நடவடிக்கைகளுக்காக அதிகாரிகள் குழுக்கள் தயார்படுத்தப்படும் என்றும் குலரத்ன கூறினார்.


இந்த நடவடிக்கைகளை ஒழுங்கமைக்க பாராளுமன்ற ஊழியர்களின்  விடுமுறை 18 முதல் 22 வரை இரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும், கூறினார்

No comments

Powered by Blogger.