மத்தியவங்கி ஆளுனர், நிதியமைச்சின் செயலாளர் குறித்து ஜனாதிபதியின் நிலைப்பாடு
தனிப்பட்ட ரீதியில் இந்த இருவர் மீது குரோதங்கள் எதுவும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிதிக் கொள்கைகள் தொடர்பில் அவர்கள் மீது அன்று முன்னெடுக்கப்பட்ட விமர்சனங்களில் மாற்றமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு பதவிகளையும் அவசரமாக மாற்றுவது நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வந்த பொருளாதார நடவடிக்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதனால் பதவி மாற்றம் செய்யவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் சிக்கல் மிகுந்த பாதையில் பயணிப்பதாகவும் இதனால் அதற்கு தலைமை தாங்கிய பிரதான அதிகாரிகளுடன் பயணிப்பதே பொருத்தமானதாக அமையும் எனவும் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடு மற்றும் மக்களின் சார்பில் எடுக்கப்பட்ட சரியான தீர்மானமாக இதனைக் கருதுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி சேவையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
Post a Comment