அடுத்தவன் வீட்டுக் கோழியை பட்டப்பகலில் திருடி, குள்ளநரிக்கு தீனி போட்ட கயவன்
அடுத்தவன் வீட்டுக் கோழியை பட்டப்பகலில் திருடி, குள்ளநரிக்கு தீனி போட்ட கயவன் கதை தெரியுமா..? படத்தில் நீங்கள் பார்ப்பவன்தான் அந்த ஆசாமி, ஆர்தர் பால்ஃபோர், முன்னால் பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர்.
நவம்பர் 2, 1917 ஆம் ஆண்டு இந்த அயோக்கியனால்தான் மிகப்பெரிய அயோக்கியத்தனமான பால்ஃபோர் பிரகடனம் வெளியிடப்பட்டது. இதன் மூலம் ஒரு வீட்டுக்கு உரிமையில்லாதவன், உரிமையாளனை வெளியேற்றி விட்டு சம்மந்தமில்லாத ஒருவனுக்கு அன்பளிப்புச் செய்த ஒரு மாபெரும் வரலாற்று அவலம் அரங்கேற்றப்பட்டது.
பிரிட்டிஷ் அரசின் செல்லப்பிராணியான யூத சியோனிஸ்ட் அமைப்புக்கு தனித் தேசம் தருவதாக வாக்களிக்கப்பட்ட இந்த வஞ்சகப் பிரகடனம் மிக இரகசியமாக திட்டமிடப்படுகிறது.1920 ஆம் ஆண்டு பாலஸ்தீனம் முழுவதையும் பிரிட்டன் ஆக்கிரமிக்கிறது.
பின்னர் 1948 ல், பிரிட்டன் அதை விட்டுப் வெளியேறுவதோடு யூத கயவர்களிடம் ஒப்படைக்கிறது.
உலக மெளனத்துக்கு மத்தியில் , பாலஸ்தீனியர்களின் சொத்துக்கள் மற்றும் நிலங்களை அபகரித்து யூதர்களுக்கு வழங்க பிரிட்டிஷ் அரசு முழு ஒத்துழைப்பையும் வழங்குகிறது. உலகெங்கிலும் சிதறுண்டு வாழ்ந்து யூதர்கள் பாலஸ்தீனத்தில் குடிபெயர வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது. இதுவே (நக்பா) என்னும் பேரவலமாக வரலாற்றில் இடம்பிடிக்கிறது.
இதன் காரணமாக பலஸ்தீன மக்கள் உடைமைகள் இழந்து அகதிகளாக மாறி, இந்த நிமிடம் வரை சொல்லனா துன்பங்களை சுமார் 75 வருடங்களாக அனுபவித்து வருகின்றனர்.
✍ தமிழாக்கம் / imran farook
Post a Comment