Header Ads



ஒவ்வொரு குடும்பமும் சொந்த வாகனம் வைத்திருக்கும் பொருளாதாரம் உருவாக்கப்படும்


எதிர்வரும் 10 ஆண்டுகளுக்குள், நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் சொந்தமாக வாகனம் வைத்திருக்கும் பொருளாதாரம், இலங்கையில் கட்டியெழுப்ப்படும் என்று தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார்.


பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், வெளிநாடுகளில் வாழ்பவர்களுக்கு மாத சம்பளத்தில் அடிக்கடி வாகனம் வாங்க முடியும் என்று குறிப்பிட்டார்.


எவ்வாறாயினும், இலங்கையில், பெரும்பான்மையான பொதுமக்களால் தமது வாழ்நாள் சேமிப்பில் கூட வாகனத்தை வாங்க முடியாத நிலை உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.


இலங்கையை பொறுத்தவரை, ஒரு 'டொயோட்டா EV'ஐ 12 இலட்சம் ரூபாய்க்கு இறக்குமதி செய்யமுடியும்.


எனினும், அதிக வரிகளே அந்த வாகனத்தின் விலையை உயர்த்துகிறது என்றும் ஹேவகே தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.