நொந்து போயுள்ள, முஸ்லிம் அரசியல்வாதிகள்
(அன்ஸிர்)
பல்வேறு தரப்பட்ட கட்சிகளைச் சார்ந்த முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் இன்று சனிக்கிழமை, 16 ஆம் திகதி ஜப்னா முஸ்லிம் இணையத்தினால் உரையாட முடிந்தது.
தமக்கு கிடைத்த விருப்பு வாக்குகள் தொடர்பில் அவர்கள் தமது கவலையை வெளிப்படுத்தினர்.
கொழும்பை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு முஸ்லிம் அரசியல்வாதி தான் இம்முறை தோல்வியடைந்திருந்தால், அரசியலை விட்டு வெளியேறியிருப்பேன் எனக் கூறினார். (அவர் தேர்தலில் வெற்றியீட்டியுள்ளார்)
மற்றுமொரு அரசியல்வாதி தனது கணிப்புகள் பொய்யாக்கப்பட்டது என்றார்.
மற்றுமொரு அரசியல்வாதி, இம்முறை தேர்தலில் தாம் போராடியது போன்று இதற்கு முன் எத்தகைய தேர்தல்களிலும் போராடவில்லை என்று கூறினார்.
இன்னுமொரு முஸ்லிம் அரசியவாதி, அநுரகுமார பக்கம் வீசிய அலையினால் தமது விருப்பு வாக்குகளை முஸ்லிம் மக்கள் தமக்கு வழங்கவில்லை என்று குறிப்பிட்டார்.
Post a Comment