கப்பம், இலஞ்சம் கொடுக்க வேண்டாம் - அதிகாரிகள் கேட்டால், வீட்டுக்கு அனுப்பி விடுவோம்
அரச அதிகாரிகள் இலஞ்சம் கேட்டால் அவர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு கோரிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் பணியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.
மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, “அரசியல்வாதிகளுக்கு இலஞ்சம் கொடுத்த காலத்தை தேசிய மக்கள் சக்தி முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.
அத்தோடு, அரச அதிகாரிகளுக்கு ஒன்றை தெரிவிக்கிறேன், அரிசியல்வாதிகளாக நாங்கள் பணியை ஆரம்பித்து விட்டோம்.
அரச அதிகாரிகள் இலஞ்சம் பெறுவதை நிறுத்த வேண்டும், மக்களும் எவருக்கும் கப்பம், இலஞ்சம் கொடுக்க வேண்டாம்.
அவ்வாறு யாரேனும் இலஞ்சம் கேட்டால், எங்களிடம் கூறுங்கள், கேட்ட நபரை வீட்டுக்கு அனுப்பி விடுவோம். நாங்கம் இப்படி தான் நாட்டை முன்னுற்றுவோம் என்றார்.
Post a Comment