Header Ads



லுணுகலை வீதியில் பாரிய நிலச்சரிவு, முச்சக்கர வண்டிகள் சேதம்


பதுளை பசறை – லுணுகலை A5 வீதியின் 13 ஆம் கட்டை பகுதியில் இன்று (18)  ஏற்பட்ட பாரிய நிலச்சரிவு காரணமாக பதுளையில் இருந்து பிபில, மட்டக்களப்பு, மொனராகலை, அம்பாறை, மஹாஓயா ஆகிய பகுதிகளுக்கான போக்குவரத்து முற்றாகவே தடைப்பட்டுள்ளதுடன், நாளாந்த கடமைகளில் ஈடுபடுவோரினது சகல செயற்பாடுகளும் பாதிப்படைந்துள்ளது.


நிலச்சரிவு காரணமாக பாறைகள், மரங்கள் வீழ்ந்து வீதியின் சுமார் 60 மீற்றர் வரையான வீதி முற்றாக மூடப்பட்டுள்ளதுடன், இரவில் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த 3 முச்சக்கர வண்டிகளும் சேதமடைந்துள்ளன.


பசறை பொலிஸார் விரைந்து பாதையை சீரமைக்கும் பணியில் துரிதமாக செயற்பட்டு வருகின்றனர்


எனினும் தொடர்ந்தும் நிலச்சரிவு ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

No comments

Powered by Blogger.