வாக்களித்த பின் ஜனாதிபதி கூறிய விடயங்கள் (வீடியோ)
வாக்களித்த பின்பு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி,
தேசிய மக்கள் சக்தி வலுவான பாராளுமன்றத்தை அமைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
மக்களுக்கு ஏற்புடையதான சட்டங்களை நிறைவேற்றி, புதிய பாராளுமன்ற கலாசாரத்தை உருவாக்க முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி வடக்கு,கிழக்கு,தெற்கு,மேற்கை ஒன்றிணைக்கும் ஆட்சியை அமைக்கும் என்றும் ஜனாதிபதி உறுதிபட கூறினார்.
ஜனாதிபதி தேர்தல் வெற்றியின் பின்னர் நாட்டில் காணப்பட்ட ஜனநாயக ரீதியிலான சுதந்திரத்தை இனிவரும் தேர்தல் காலங்களிலும் எதிர்பார்ப்பதாகவும், தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் மக்கள் அதை உணர்ந்துள்ளனர் என்றும் அதனையே இந்நாட்டின் தேர்தல் கலாசாரமாக மாற்ற எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
196 பாராளுமன்ற உறுப்புரிமைக்காக 8361 வேட்பாளர்கள் இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றனர். 29 ஆசனங்கள் தேசிய பட்டியல் ஊடாக தெரிவு செய்யப்படும்.
https://www.facebook.com/share/v/1EncSCtHyZ/
Post a Comment