தாஜுதீன் கொலை குறித்து விசாரணை நடத்துவேன் - ஜனாதிபதி
வசீம் தாஜுதீன், லசந்த விக்ரமதுங்க ஆகியோரின் கொலைகள் மற்றும் பிரதீப் எக்னெலிகொட காணாமல் போன சம்பவங்களுக்கு காரணமானவர்களை அரசாங்கம் விசாரணை செய்து சட்டத்தின் முன் நிறுத்தும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தம்புள்ளையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், அரசியல் அதிகாரத்தால் அப்பாவி மக்கள் கொல்லப்படும் யுகத்தை அரசாங்கம் முடிவுக்குக் கொண்டுவரும் எனவும், அனைவரின் உயிரும் பெறுமதியானது எனவும் தெரிவித்தார்.
"அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி நடத்தப்படும் அனைத்து கொலைகளின் சகாப்தத்தை நாங்கள் முடிவுக்கு கொண்டு வருவோம், ஒவ்வொருவரும் அவர்களின் உயிருக்கு மதிப்புள்ளவர்கள், வசீம் தாஜுதீன், லசந்த விக்கிரமதுங்க ஆகியோரின் கொலைகள் மற்றும் எக்னெலிகொட காணாமற்போன சம்பவங்களுக்கு எவரும் பதிலளிக்கவில்லை. அப்பாவி மக்களை கொன்று குவித்த குற்றவாளிகளை நாங்கள் சட்டத்தின் முன் நிறுத்துவோம் ”என்று கூறிய அவர், அனைவரும் அச்சமின்றி வாழும் சூழல் உருவாக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
Post a Comment