உலகிலேயே மிக கடினமான, சிக்கலான நிர்வாகப் பணி
இந்த உலகிலேயே மிகவும் கடினமான மற்றும் சிக்கலான நிர்வாகப் பணிதான் வீட்டு வேலைகளை நிர்வாகிப்பதாகும்.
கற்பித்தல் ஒரு பணி என்போம், பயிற்றுவித்தல் ஒரு பணி என்போம்.
மருத்துவம் ஒரு பணி என்போம். சட்டத்துறை ஒரு பணி என்போம்,
சமையல் ஒரு பணி என்போம்,
சுத்திகரிப்பு ஒரு பணி என்போம்.
ஆனால் நம் இல்லத்தரசிகள் இப்பணிகள் யாவற்றையும் வீட்டு நிர்வாகம் என்ற தலைப்பில் ஒருசேர பணியாற்றுகிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
நாளாந்தம் நம் இல்லங்களில்...
கற்பித்தல் பணி நடக்கிறது...¨
சமையல் பணி நடக்கிறது...
பராமரிப்புப் பணி நடக்கிறது.
உடல் காயங்கள் கட்டுப்போடப்படுகிறன. .
மனக் காயங்கள் ஆற்றுப்படுத்தப்படுகிறன.
கண்ணீர்கள் துடைக்கப்படுகிறன. நம் இல்லங்களில் ஆரவாரமில்லாமல் ஒரு சந்ததியே வளர்த்தெடுக்கப்படுகிறது.
உங்கள் தாய்மார்களை, உங்கள் மனைவிமார்களை, உங்கள் சகோதரிகளை, உங்கள் மகள்மார்களை மரியாதையாக நடாத்துங்கள். அவர்களுடன் அன்பாகவும் ஆதரவாகவும் இருக்கப் பழகுங்கள். அவரகளுக்காக செலவழிக்க கஞ்சத்தனம் காட்டாதீர்கள். அவர்கள் நோய்வாய்ப்படும் போது சிகிச்சை அழியுங்கள்.
நம் வீட்டுப் பெண்கள் மலர்ச் செடிகள் போன்றவர்கள். காதலும் கவனிப்புமே நீர்பாசனங்கள். செடிகள் செழித்தோங்கி வளர்வதும் செத்து மடிவதும் உங்கள் கைகளில் தான்.
✍ தமிழாக்கம் / imran farook
Post a Comment