அரசாங்கத்தின் மீது மகிந்தவின் விமர்சனம்
சமகால அரசாங்கம் தனது பாதுகாப்பு தொடர்பில் மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கருத்து வெளியிட்டுள்ளார்.
அரசாங்கம் தமக்கான பாதுகாப்பை குறைத்தாலும், மக்கள் தன்னை பாதுகாத்துக் கொள்வார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது பாதுகாப்பில் தான் அதிக கவனம் செலுத்துவதில்லை. அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து தான் அதிருப்தி அடையவில்லை என்றும் மகிந்த தெரிவித்துள்ளார்.
மகிந்தவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டமை தொடர்பில், ஊடகவியலாளர் ஒருவரினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது இதனை தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் தனது குடும்பத்தினருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தினால், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விசாரணைகளுக்கு ஆதரவளிப்பதாக மகிந்த தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு வேறு வேலையில்லாமல் பல குற்றச்சாட்டு சுமத்தி விசாரணைகளை நடத்தி வருகின்றது. செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருந்தாலும் அதனை விட்டுவிட்டு இவற்றினை செய்கின்றது.
பழைய கோப்புகளை தூக்கிக் கொண்டு சுற்றுவதை விட்டுவிட்டு மக்களின் வாழ்க்கை சுமையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment