எச்சரிக்கையை நீக்குமாறு இலங்கை, அமெரிக்காவிடம் கோரிக்கை
“அறுகம் வளைகுடா பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என்று தூதரகத்திற்கு நம்பகமான தகவல் கிடைத்தது. இந்த அச்சுறுத்தலால் ஏற்பட்டுள்ள கடுமையான ஆபத்து காரணமாக, தூதரகம் உடனடியாக மற்றும் மறு அறிவித்தல் வரை அறுகம்பைக்கான பயணத் தடையை தூதரக பணியாளர்களுக்கு விதித்துள்ளது. மறு அறிவித்தல் வரும் வரை அறுகம் விரிகுடா பகுதியை தவிர்க்குமாறு அமெரிக்க பிரஜைகள் கடுமையாக வலியுறுத்தப்படுகிறார்கள்” என அமெரிக்க தூதரகம் ஒக்டோபர் 23 அன்று எச்சரிக்கையை வெளியிட்டது.
அமெரிக்காவின் பாதுகாப்பு எச்சரிக்கையைத் தொடர்ந்து, இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு கவுன்சில், பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக தென்னிலங்கையில் உள்ள சில சுற்றுலாப் பகுதிகளிலுள்ள தமது பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேலியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
அறுகம் வளைகுடா பகுதி மற்றும் இலங்கையின் தெற்கு மற்றும் மேற்கில் உள்ள கடற்கரைகள் தொடர்பான இந்த எச்சரிக்கையானது "சுற்றுலாப் பகுதிகள் மற்றும் கடற்கரைகளை மையமாகக் கொண்ட பயங்கரவாத அச்சுறுத்தல் பற்றிய சமீபத்திய தகவலிலிருந்து விடுக்கப்பட்டுள்ளது” என்று நிறுவனம் கூறியது.
அதன் பின்னர், இலங்கை அரசாங்கம் சுற்றுலாவுக்காக நாட்டில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுத்ததுடன், இது தொடர்பாக கொழும்பில் உள்ள இராஜதந்திர சமூகத்தினருக்கும் விளக்கமளித்துள்ளது. அத்துடன் இலங்கையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Post a Comment