சஜித்திற்கு மீண்டும் எதிர்க்கட்சித் தலைவர் பதவி
நடைபெற்று முடிந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகளின் படி, ஐக்கிய மக்கள் சக்தி இரண்டாவது இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது.
இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு மீண்டும் புதிய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படவுள்ளது.
முன்னைய நாடாளுமன்றத்தில் அந்தக் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய பெருமளவிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி (SJB) 1,968,716 வாக்குகளைப் பெற்று 35 ஆசனங்களையும் தேசிய பட்டியில் ஊடாக ஐந்து ஆசனங்களையும் பெற்றுக் கொண்டுள்ளது.
Post a Comment