பில்லியன் பில்லியன்களாக வருமானத்தை ஈட்டிய மின்சார சபை
இந்த ஆண்டில் மின்சார கட்டணங்கள் குறைக்கப்பட்ட நிலையிலும் இந்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான மூன்றாம் காலாண்டு பகுதியில் இலங்கை மின்சார சபை 126.8 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளது.
இது கடந்த 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 19.8 வீத அதிகரிப்பாகும்.எவ்வாறெனினும் இந்த ஆண்டில் இரண்டு தடவைகள் மின்சார கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
கடந்த மார்ச் மாதம் 21.9 வீதத்தினாலும் ஜூலை மாதம் 22.5 வீதத்தினாலும் மின்சார கட்டணங்கள் குறைக்கப்பட்டிருந்தன. இவ்வளவு பாரிய தொகை மின்சார கட்டணங்கள் குறைக்கப்பட்ட நிலையிலும் இலங்கை மின்சார சபை பெருந்தொகையில் வருமானத்தை ஈட்டி உள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைக்கு அமைவாக பெருந்தொகையில் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டு இருந்தது.
இந்த மின்சார கட்டண அதிகரிப்பு காரணமாக வறிய மக்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்ததுடன் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக முயற்சிகளும் பெரும் பின்னடைவை எதிர்நோக்க நேரிட்டிருந்தது.
இவ்வாறான ஒரு பின்னணியில் இந்த ஆண்டில் இலங்கை மின்சார சபை வருமானத்தை ஈட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment