சில விமான சேவைகள் இரத்து
3 விமானங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், பல விமானங்களின் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும், ஏனையவை தாமதமானதாகவும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
ஒவ்வொரு விமானமும் அதன் விமான பயணத்தை முடித்த பிறகு தொழில்நுட்ப மதிப்பீட்டு சோதனைக்கு உட்படுத்தப்படும். குறிப்பிட்ட சில விமானங்களில் மேற்கொள்ளப்படும் தொழில்நுட்ப பராமரிப்பு பணிகளுக்கு சிறிது கால அவகாசம் தேவைப்படுவதாகவும், அதற்கமைவாக இந்த 3 விமானங்களும் தொழில்நுட்ப பராமரிப்பு பணிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
குறித்த விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு அறிவிக்க ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இந்த விமானங்களின் ஊடாக குறித்த இடங்களுக்கு கொண்டு செல்ல விரும்பும் பயணிகளை மாற்று விமானங்கள் மூலம் அனுப்பவும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.
Post a Comment