Header Ads



புதிய சபாநாயகராக அசோக ரன்வல, வாக்கெடுப்பின்றி தெரிவு


10 ஆவது  பாராளுமன்றத்தின் சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல, வாக்கெடுப்பு இன்றி தெரிவு செய்யப்பட்டார். அவருடைய பெயரை பிரதமர் கலாநிதி ஹரின் அமரசூரிய முன்மொழிந்தார். அமைச்சர் விஜித ஹேரத் வழிமொழிந்தார்.


சபாநாயகரின் பதவிக்கு வேறு யாரும் பெயரை பிரேரிக்கின்றீர்களா என, பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் கேட்டார். எனினும், சில நிமிடங்கள் அமைதியாக இருந்தனர்.


அதன்பின்னர், கலாநிதி ஹரின் அமரசூரிய  அமைச்சர் விஜித ஹேரத் ஆகிய இருவரும்  புதிய சபாநாயகர் அசோக ரன்வலவை அக்கிராசனத்துக்கு அழைத்துச் சென்றனர். அதன்பின்னர், பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். பின்னர், வாழ்த்துதெரிவித்த புதிய சபாநாயகர் அசோக ரன்வல, ஏனைய உறுப்பினர்களின் பதவிப்பிரமாணம் இடம்பெறுகின்றது. 

No comments

Powered by Blogger.