நம்பகம் என்பது,,,
எல்லோரும் அதனை சொந்தம் கொண்டாடுகின்றனர். ஆனால் அது என்றும் ஒரு அனாதைக் குழந்தைதான்.
எல்லா உறவுகளையும் தாங்கி நிற்பது நம்பகம் என்ற இந்த அத்திவாரம் தான்.
நம்பகம் என்ற அந்த அத்திவாரம் சாய ஆரம்பிக்கும் போது அதன் மேல் கட்டப்பட்ட சகல கட்டமைப்புக்களும் சாய ஆரம்பிக்கும்.
நம்பகம் என்பது கண்ணீர் போன்றது, அது விழுந்தால், அது திரும்பி வராது.
நம்பகம் என்பது, வாழ்க்கை வரம் போன்றது
ஒரே நபருக்கு இரண்டு முறை வழங்க முடியாது.
நம்பகம் என்பது அழிக்கும் இரேஸர் போன்று. தவறுகள் அதிகரிக்க அதிகரிக்க மிகவும் சிறியதாகிவிடுகிறது.
நம்பகம் என்பது மணல் கோட்டை போன்றது, கட்டுவது கடினமாக இருக்கும், ஆனால் அதை அழிப்பது மிக எளிதானது...!
✍ தமிழாக்கம் / imran farook
Post a Comment