தயவுசெய்து இப்படியெல்லாம் செய்யாதீர்கள்
தொடர்பாடல் ஒழுங்கு முறைகள்
👉 ஒருவருக்கு தொடர்ச்சியாக இரண்டு முறை அழைப்பு ஏற்படுத்தியும் பதில் இல்லை என்றால், மீண்டும் தொடர்பு கொள்ளாதீர்கள்! ஏதாவது முக்கியமான வேலைப் பளுவில் அவர் இருப்பார் என்று நல்லெண்ணம் வையுங்கள்!
👉 ஒருவரிடம் நீங்கள் கடன் வாங்கியிருந்தால் அவர் கேட்பதற்கு முன்பே நீங்கள் கடனை திருப்பி செலுத்துங்கள். இது உங்கள் மரியாதைக்கும் நல்லது, உங்கள் நேர்மையான குணத்தையும் எடுத்துக்காட்டுகிறது. ஏனைய கொடுக்கள் வாங்கள்களிலும் இதனை பின்பற்றுங்கள்!
👉 யாராவது உங்களை கடையில் சென்று சாப்பிட அழைத்தால் விலை உயர்ந்த உணவுகளை ஆர்டர் செய்ய பணிக்காதீர்கள்!
👉 யாரிடமும் "ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை?" " ஏன் இன்னும் பிள்ளைகள் இல்லை" " ஏன் இன்னும் வீடு கட்டவில்லை" " ஏன் இன்னும் கார் வாங்கவில்லை" போன்ற சங்கடமான கேள்விகளைக் கேட்காதீர்கள். அநாவசியமான கேள்விகளை தவிர்ந்து கொள்ளுங்கள்!
👉 பொது இடங்களில் உங்களுக்கு பக்கத்தில் இருப்பவர்களோடு மரியாதையாக நடந்து கொள்ளுங்கள்.
இருப்வர் ஆணோ பெண்ணோ, முதியவரோ, இளைஞரோ யுவதியோ என்பது முக்கியமில்லை. பொது இடங்களில் மற்றவர்களுக்கு நாம் செய்யும் உபகாரங்கள் அவர்கள் மனதை விட்டும் என்றும் மறையாது. பொது இடங்கள் என்பது, நாம் நாகரீகமான மனிதனர்களா? அல்லது அநாகரீகமான மனிதர்களா? என்பதை எடுத்துக் காட்டும் இடங்களாகும்.
👉 ஒரு நண்பருடன் டாக்ஸியில் சென்று அவர் கட்டணத்தை செலுத்தினால், அடுத்த முறை நீங்கள் கட்டணத்தை செலுத்துங்கள்.
👉 மாற்றுக் கருத்துக்களை மதிக்கப் பழகுங்கள். உங்களுக்கு 6 ஆகத் தோன்றுவது உங்களுக்கு எதிர் திசையில் உள்ள ஒருவருக்கு 9 ஆகத் தோன்றும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
👉 யாரும் பேசும் போது இடையில் குறுக்கிடாதீர்கள். பேசவிட்டு பிறகு நீங்கள் விரும்புவதைத் தேர்ந்தெடுக்க, விரும்புவதை நிராகரிக்க உங்களுக்கு உரிமையுண்டு.
👉 நீங்கள் யாரிடமாவது பேசிக் கொண்டிருந்தால், அவர் கேட்பதை தவிர்ப்பது போல் உணர்ந்தால் பேசுவதை நிறுத்துங்கள்.
👉 யாராவது உங்களுக்கு ஏதாவது உதவி செய்யும் போது "நன்றி" என்ற வார்த்தையை சொல்ல மறக்காதீர்கள். நன்றி பாராட்டுவது நாகரீகத்தின் அடையாளமாகும்.
👉 யாரேனும் ஒருவர் தங்கள் மொபைலில் உங்களுக்கு ஒரு புகைப்படத்தைக் காட்டினால், அடுத்த புகைப்படத்தை பார்க்க இடதாக அல்லது வலதாக அழுத்தாதீர்கள்! தனிப்பட்ட புகைப்படங்கள் இருந்தால் சங்கடத்தை ஏற்படுத்திவிடும்.
👉 ஒருவர் வைத்தியசாலையில் இருப்பதாக உங்களிடம் சொன்னால், என்ன நோய் என்று துருவித் துருவி விசாரிக்காதீர்கள்! "விரைவாக குணமடைய பிரார்த்தனைகள்" என்று சொல்லுங்கள்! உங்களிடம் சொல்ல விரும்பினால், நீங்கள் கேட்காமலேயே சொல்வார்கள்!
👉 நீங்கள் தோழில் செய்யும் இடத்தில் உங்கள் முதலாளிக்கு நீங்கள் கொடுக்கும் அதே மரியாதை காவலாளிக்கும் கொடுங்கள். கீழால் உள்ளவர்களுடன் மரியாதையாக நடந்தால் உங்கள் மரியாதைதான் கூடும்.
✍ தமிழாக்கம் / imran farook
Post a Comment