பிடியாணை போதாது, நெதன்யாகுவுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்
காசா போர் தொடர்பாக கடந்த வாரம் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் ஆகியோருக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்ததை அடுத்து, இஸ்ரேல் தலைவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும், பிடியாணை அல்ல என்று ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி வலியுறுத்தியுள்ளார்.
இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் ஒரு பிரிவான பாசிஜ் துணை ராணுவப் படைக்கு வழங்கிய செய்தியில் அவர் இதனைத் தெரிவித்தார்.
"காசா மற்றும் லெபனானில் மக்களின் வீடுகளை குண்டுவீசி தாக்குவது வெற்றியல்ல," என்று அவர் கூறுகிறார், "மக்களின் வீடுகள், மருத்துவமனைகள் மற்றும் சமூகங்கள் மீது குண்டு வீசுவதால் தான் வெற்றி பெற்றதாக முட்டாள்கள் நினைக்கக்கூடாது. இதை ஒரு வெற்றியாக யாரும் கருதவில்லை.
"சியோனிஸ்டுகள் செய்தது போர்க்குற்றம்" என்று அவர் தெரிவித்தார். "அவர்கள் பிடியாணை பிறப்பித்துள்ளனர், இது போதாது - நெதன்யாகுவுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும். இந்த கிரிமினல் தலைவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்” என்றார்.
Post a Comment