எமது கல்லூரியின் கருப்பு நாட்கள் இவை...
அஸ்ஸலாமு அலைக்கும்.
நேற்றைய தினம் (26-11-2024) அசாதாரண சூழ்நிலை, காலநிலை மாற்றத்தினால் நிந்தவூர் காசிபுல் உலூம் அரபுக் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர்களை அவர்களுடைய பெற்றோர்களிடம் ஒப்படைப்பதற்காக அவசர கல்லூரியின் நிர்வாகத்தின் மசூராவின் அடிப்படையில் எனது சகோதரருடைய பேருந்தின் மூலம் மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டார்கள்.
ஒவ்வொரு ஊராக சென்ற பஸ் வாகனம் சம்மாந்துறையை நோக்கி பயணிக்க முடியாமல் போனது காரைதீவில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் ட்ராக்டர் மூலமாக மாணவர்களை ஏற்றி அனுப்பப்பட்டார்கள்.
காலநிலையின் மாற்றம் இறைவனுடைய ஏற்பாடு மாணவர்களை ஏற்றிச் சென்ற ட்ராக்டர் வாகனம் கவிழ்ந்தது.
இந்த அசாதாரண நிலையை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத அளவு மன வேதனை அளிக்கிறது.
இப்படியான நேரங்களில் எழுத்தாளர்கள், மீடியாக்கள் அரபுக் கல்லூரியின் நிர்வாகிகளை பேச்சுக்களாலும் எழுத்துக்களாலும் விமர்சிப்பது இப்போதைய நிலைமைக்கு பொருத்தமற்றது.
நிர்வாகிகள் என்பவர்கள் நுபுவத்துடைய இல்மை கற்கக்கூடிய மாணவர்களுடைய தேவைகளை எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் இறைவனுடைய திருப்தியை மாத்திரம் எதிர்பார்த்து செயல்பட கூடியவர்கள்.
இப்போதைய நிலைமைக்கு கேள்விக்கு மேல் கேள்வி விவாதம் இந்த விடயங்களை எல்லாம் நிறுத்திவிட்டு காணாமல் போன அந்த அன்பு மாணவச் செல்வங்களை மீட்டெடுக்கும் விடயத்தில் ஈடுபடுவோம், மரணித்த அந்த சீரார்களுக்காக இறைவனிடம் பிரார்த்திப்போம் அவர்களுடைய குடும்பத்திற்கு ஆறுதல் வழங்குவோம்.
எமது கல்லூரியின் கருப்பு நாட்கள் இவை.
மன வேதனையுடன்...
Moulavi N. Infas Ahamed (Kashifi)
Post a Comment