Header Ads



ஜனாஸாக்களை தேடுவதில் தோழர், லாவன் தவராஜின் உயர் பங்களிப்பு


மாவடிப்பள்ளி அனர்த்தத்தின் போது தற்பொழுது பேசப்படும் பேர்களில் தோழர் லாவன் தவராஜ் அவர்கள் முன்னிலையானவர். (தற்பொழுது சமூக வலைத்தளங்களில் இவரைப்பற்றி படிக்கும் போதுதான் தோழரின் செயற்பாடுகள் எனக்கு ஞாபகம் வந்தது)


ஏனென்றால் இந்த சம்பவம் நடந்ததன் பிறகு முதலாவது ஜனாஸா கண்டெடுக்கப்பட்டத்தில் இருந்து 06 வது ஜனாசாவும் கண்ணெடுக்கப்படும் வரை, நேரடியாக களத்தில் நின்றவன் என்ற அடிப்படையில் பல சம்பவங்கள் எனக்குத் தெரியும். 


விடயத்திற்கு வருகிறேன்..


எமது சகோதர கிராமமான காரைதீவைச் சேர்ந்த தோழர் லாவன் தவராஜ் அவர்கள் ஜனாஸாக்களைத் தேடும் பணியில் படகில் அங்கும் இங்குமாக அலைந்து திரிந்தார். அவரின் ஆளுமையில் ஒரு கட்டத்தில் "நேவி வீரர்களுக்கு சிங்களத்தில் உரத்த குரலில் பேசியதைக் கண்டேன்" அப்பொழுது "நேவியில் பெரியவர்" இவர் தான் என்று நினைத்து விட்டேன். அந்த அளவிற்கு மிகவும் பொறுப்பாக நடந்து கொண்டார்.


தொடர்ந்தும் ஜனாஸாக்களை தேடும் பணி மும்முரமாக இடம்பெற்றது. படகின் முன்னால் தைரியமாக இவர்தான் நின்று கொண்டிருந்தார். பல ஆச்சரியமான சம்பவங்களை நிகழ்த்தி இருந்தார். ஒரு கட்டத்தில் ஏதோ தூரத்தில் கையை காட்டி படகினை "டக்கென எடுங்க" என்று சரளமாக தமிழிலும் பேசினார். எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது. என்னடா நேவிக்காறன் தமிழில் இப்படி பேசுறானே என்று... பிறகு படகு வேகமாகப் பறந்தது. 🛹 அதன் பிறகு முதலாவது ஜனாஸா அடையாளம் காணப்பட்டு காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு முன்னால் கொண்டு செல்லப்பட்டது.. 


அந்த நேரம் எனக்கு அழுகை வந்தது கைகள் படம் பிடிக்க மறுத்தன. கண்ணீர் நதி போல் ஓடியது.. கால்களும் கைகளும் தடுமாறின. ஒரு நிமிடம் திக்குத்திசையானேன்..


நானும் மௌலவி Simly Hafizh Nintavur சகோதரர் Naasiroon Sulaiman ஆகியோர் பாதுகாப்பு அதிகாரிகளோடு தான் நின்றோம். மறுபக்கம் பெரும் ஜனத்திரல் கடலாய் இருந்தது. நான் இருக்கும் இடத்திலிருந்து ஜனாஸா கொண்டு செல்லப்பட்ட இடத்திற்கு செல்ல முடியாத நிலை காணப்பட்டது. 


பிறகு கலங்கிய முகத்தோடு தோழர் லாவன் மீண்டும் கரைக்கு வந்ததைக் கண்டேன். அவர் முகத்தில் பெரும் கவலை காணப்பட்டது. 


அவருடைய ஆளுமையும், பார்வையும் தெளிவாக இருந்ததைக் கண்டு வியப்புற்றேன். ஒரு கட்டத்தில் இவர் செல்லுகின்ற படகில் நானும் செல்ல வேண்டும். இவைகளைப் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று மனதில் பாரிய அங்கலாய்ப்பு ஏற்பட்டது. அந்தளவிற்கு "படம் காட்டாமல் பாடம் நடாத்தினார்" தோழர் லாவன்.


இங்கு காணப்படும் அதிகமான புகைப்படங்கள் மாலை 4:15 க்கு பிறகு எடுத்தவைகளாகும். இதன் பிறகு சமூகமளிக்கும் ஒவ்வொரு நேரத்திலும் இவரைக் கண்டேன். 


அதனால் கமராவில் இவரைப் படம் பிடிக்க முடியாமல் போய்விட்டது. அந்த அளவுக்கு படு பிஸியாக இருந்து களத்தில் பணியாற்றினார் தோழர் லாவன். 


லாவன் உங்களுக்கு இறைவன் நீண்ட ஆயுளையும் நிறைந்த செல்வத்தையும் வழங்க பிரார்த்திக்கின்றேன்.!


தோழருக்கு பொருத்தமான பாடல் இதுதான் : 

நண்பா நண்பா

நீ நான் நாம் ஆவோம்

நண்பா நண்பா

நீ நான் நாம் ஆவோம்

தமிழ் சொல்லி தந்தது மனிதத்தை மனிதத்தை மனிதத்தை

இனம் என பிரிந்தது போதும்

மதம் என பிரிந்தது போதும்

மனிதம் ஒன்றே தீர்வாகும்

உயிர்களை இழந்தது போதும்

உறவுகள் அழிந்தது போதும்

அன்பே என்றும் தீர்வாகும்..


இந்த பெரும் துயரத்திலும் மிகப்பொறுமை காக்கும் சம்மாந்துறைக்கும் அதன் மக்களுக்கும் அல்லாஹ் பரக்கத் செய்வானாக.!


Sulaiman Raafi 

30.11.2024 

No comments

Powered by Blogger.