“சவூதி - இலங்கை இடையே சிறந்த உறவுகள்" - தூதுவர் காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி
மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பார்வைக் குறைபாடு மற்றும் அதை ஏற்படுத்தும் நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கான இலவச சவூதி நூர் தன்னார்வத் திட்டம் தென் மாகாணத்தில் வலஸ்முல்லை பகுதியில் இலங்கைக்கான சவூதி தூதர் காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி அவர்களால் அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வின் போது வலஸ்முல்ல ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற உத்தியோகபூர்வ வைபவத்தில் தூதுவர் காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி,
“சவூதி அரேபியா மற்றும் இலங்கைக்கு இடையிலான சிறந்த உறவுகள் மற்றும் சவூதியின் மனிதாபிமான உதவிகளுக்கான ஆர்வத்தின் அடிப்படையிலும், சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவுத் மற்றும் பட்டத்து இளவரசர் மற்றும் பிரதமர் முஹம்மத் பின் சல்மான் அல் சவுத் தலைமையில் சவூதி அரேபியா, இலங்கை உட்பட உலகெங்கிலும் உள்ள குறைந்த வருமானம் பெறும் மக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கத்திலும், மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் தென்னிலங்கையின் வலஸ்முல்லை பகுதியில் பார்வைக்குறைவை எதிர்த்துப் போராடும் தன்னார்வத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது” என தெரிவித்தார்.
ஆயிரக்கணக்கான கண் சம்மந்தப்பட்ட நோய்களைக் கண்டறிதல், அவற்றுக்கு தக்க சிகிச்சை வழங்குதல், அறுவை சிகிச்சை, இதர சிகிச்சைகள், மருந்துகள், கண்புரை (cataract) அகற்றுதல் மற்றும் அறுவை சிகிச்சை, தடுக்கப்பட்ட கண்ணீர் குழாய்களுக்கு சிகிச்சையளித்தல், நோயாளிகளுக்கு மருந்துகள், கண்ணாடிகள் மற்றும் லென்ஸ்கள் ஆகியவற்றை வழங்குதல் அத்தோடு நோயாளிகளுக்கான விழிப்புணர்வை வழங்குதல் ஆகியவை இத்திட்டத்தில் அடங்கும் எனவும் தூதுவர் அவர்கள் குறிப்பிட்டார்.
மேலும் தூதுவர் அவர்கள், சவூதியின் தலைமைகளான மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவுத் மற்றும் பட்டத்து இளவரசர், பிரிதமர் முஹம்மத் பின் சல்மான் அல் சவுத் ஆகியோருக்கும், மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம், அல்-பசார் சர்வதேச அறக்கட்டளை,வெளிவிவகார அமைச்சு, இலங்கை சுகாதார அமைச்சு, செய்லான் முஸ்லிம் இளைஞர்களுக்கான அமைப்பு (AMYS), வலஸ்முல்லை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் மற்றும் ஊளியர்களுக்கு இந்த வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கான முயற்சிகளுக்காக நன்றியையும் தெரிவித்தார்.
Post a Comment