Header Ads



கொலை குற்றவாளிக்கு மன்னிப்பு - இலஞ்சம் பெற்றாரா என விசாரணை


முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு இன்று (26) வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.


ரோயல் பார்க் கொலைக் குற்றவாளிக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி இலஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் விசாரணைக்காக அவர் அழைக்கப்பட்டதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும்/அல்லது பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே இரத்தின தேரர் ஆகியோர், கொழும்பு ரோயல் பார்க் அடுக்குமாடி குடியிருப்பில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட டொன் ஷ்ரமந்த ஜூட் அந்தோனி ஜயமஹாவிற்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க இலஞ்சமாக பணம் பெற்றனரா என்பது குறித்து 2022 ஆம் ஆண்டு இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சாத்துதல்களைப் விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முறைப்பாடளிக்கப்பட்டது.


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் மொன்டேக் சரச்சந்திரவினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 


2005 ஆம் ஆண்டு ராஜகிரியவில் உள்ள ரோயல் பார்க் காண்டோமினியம் வளாகத்தில் இவோன் ஜோன்சன் கொலை செய்யப்பட்டதற்காக ஜெயமஹாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது, அதன் பிறகு அவருக்கு 2019 இல் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டது.

No comments

Powered by Blogger.