அடுத்த பிரதமர் யார்..?
ஜனாதிபதி அநுரகுமார ஜனாதிபதியாக பதவியேற்றதும், விஜித்த ஹேரத்தே பிரதமராக நியமிக்கப்படுவாரென்ற தகவல்கள் வெளியான நிலையில், அமைச்சர் விஜித்த ஹேரத்தே முந்திக் கொண்டு, பிரதமராக ஹரினி நியமிக்கப்படுவாரென பகிரங்கமாக அறிவித்தார்.
இதையடுத்து ஹரினி அமரசூரிய பிரதமராக நியமிக்கப்பட்டார்.
பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போதும், தேர்தலின் பின்னர், ஹரினிதான மீண்டும் பிரதமர் என விஜித்த ஹேரத் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் தற்போது தேர்தல் முடிவுகளின்படி 7 இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று விஜித்த ஹேரத் சாதனை படைத்துள்ளார். ஹரினியும் 6 இலட்சம் வாக்குகளை பெற்றுள்ளார்.
இந்தநிலையில் யார் அடுத்த பிரதமர், என்ற கேள்விகள் மீண்டும் எழுந்துள்ளன.
Post a Comment