விருப்பு வாக்கில் சகோதரனை வீழ்த்திய சகோதரி
வயநாடு மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்ட நிலையில் அதன் முடிவு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில், காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி 6,22,338 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றிருக்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சத்யன் மோகேரி 2,11,407 வாக்குகளைப் பெற்றிருக்கிறார், பாஜக வேட்பாளர் 1,09,939 வாக்குகள் பெற்றிருக்கிறார்.
இந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கேரளாவின் வயநாடு மற்றும் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார் காங்கிரஸ் கட்சி தலைவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி.
ரேபரேலி தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக தொடர விருப்பம் தெரிவிக்க வயநாடு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு அதற்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்த தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சியின் தலைவர் பிரியங்கா காந்தியின் பெயர் அறிவிக்கப்பட்டது. இது நாள் வரையில் காங்கிரஸ் கட்சியின் இதர மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர்களுக்கு வாக்கு சேகரிக்கும் பணிகளிலும் பிரசாரத்திலும் பங்கேற்ற பிரியங்கா காந்தி முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இதே தொகுதியில் ராகுல் காந்தி 3,64,422 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். தற்போது அவரைக் காட்டிலும் கூடுதல் வாக்குகள் வித்தியாசத்தில் அதாவது 4,10,931 வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி வெற்றி பெற்றுள்ளார்.
Post a Comment