சவூதி அரசின் மனிதாபிமான பணிகள் போற்றத்தக்கவை - மௌலவி தாஸீம்
இதனடிப்படையில் இலங்கை நாட்டிலும் சகல இன மக்களும் நன்மை பெறும்வகையில் பல்வேறு மனிதாபிமான பணிகள் இடம்பெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக இம்முறையும் கண் சத்திர சிகிச்சை முகாம்கள் நடைபெறுகின்றன. இச்சிகிச்சையை பெறுவதற்காக நோயாளிகளை பரிசோதனை செய்யும் முகாம்களும் நடைபெற்றுவரும் இவ்வேளையில். சவூதி அரசுக்கு இலங்கை வாழ் மக்களின் நன்றிகள் உரித்தாகட்டும் என ஜம்மியது ஷபாப் நிறுவனத்தின் பணிப்பாளர் மௌலவி எம்.எஸ்.எம். தாஸீம் கூறினார்.
இம்முறையும் சவூதி மன்னர் ஸல்மான் மையத்தின் பூரண அனுசரணையில் ஹம்பந்தொட்ட, வலஸ்முல்ல மற்றும் காத்தான்குடி ஆதார வைத்திய சாலைகளில் எதிர்வரும் நவம்பர் மாதம் மூன்றாம் திகதிமுதல் பதினேளாம் திகதிவரை நடைபெறவிருக்கும் முகாம்களின் முன்னோடி கண் பரிசோதனை நிகழ்வுகள் கொழும்பில் நடைபெற்ற போதே இவ்வாறு கூறினார். இதன் தொடர்ச்சியாக ஏனைய கண் பரிசோதனை முகாம்களும் நாட்டின் பல பிரதேசங்களில் இடம்பெறும்.
கொழும்பு மாவட்ட மஸ்ஜித்கள் சம்மேளனத்தின் தலைவர் சட்டத்தரணி ஷிராஸ் நூர்டீன்,செயலாளர் அப்துல் கரீம்,அமிஸ் நிறுவனத்தின் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.ஜெ. எம்.வாரித் மற்றும் பலர் கலந்துகொண்டனர். பல ஆயிரம் நோயாளிகள் பயன்பெறும் இம்முகாம்கள் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி அவர்களின் வழிகாட்டலின்கீழ் நடைபெறுவது விஷேட அம்சமாகும்.
Post a Comment