Header Ads



பிரதமரின் அடிப்படை உரிமை மீறல் மனு


பிரதமர் ஹரினி அமரசூரிய உள்ளிட்டோரினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் ஜனவரி 30ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது.


கடந்த வருடம் பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்கும் பொல்துவ சந்தியில் தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் குழுவினர் நடத்திய அமைதிப் போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் தமது அடிப்படை மனித உரிமைகளை மீறியதாகக் கூறி அப்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவிற்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  


இந்த மனு யசந்த கோதாகொட, அச்சல வெங்கப்புலி மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று (22) அழைக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.