தாராளவாத இராஜதந்திரம் இறையாண்மை நாடு என்ற கருத்தின்கீழ், வெளிநாட்டு உறவுகளை கட்டியெழுப்புவது குறித்து கலந்துரையாடல்
புதிய அரசாங்கத்தின் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராகப் பதவியேற்ற பின்னர், வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளை விஜித ஹேரத் சந்தித்தார்.
வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறையின் புதிய செயலாளர் திருமதி அருணி ரணராஜா மற்றும் முன்னாள் செயலாளர் திருமதி அருணி விஜேவர்தன ஆகியோர் அமைச்சின் அதிகாரிகளுடன் இணைந்து தாராளவாத இராஜதந்திரம் - இறையாண்மை கொண்ட நாடு என்ற கருத்தின் கீழ், வெளிநாட்டு உறவுகளை எவ்வாறு எடுத்துக்கொள்வது என்பது குறித்து கலந்துரையாடினர்.
அமைச்சு அதிகாரிகள் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் உள்ள சிரமங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
Post a Comment