Header Ads



முஸ்லிம் தனியார் சட்டம் - ஜனாதிபதி, பிரதமரிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை


 “நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பதாக முஸ்லிம்  விவாகரத்துச் சட்டம் திருத்தம் தொடர்பாக தங்களது நிலைப்பாட்டைப் பகிரங்கமாக வெளிப்படுத்துமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் 135 சிவில் சமூக செயற்பாட்டாளர்களும், 18 சிவில் அமைப்புக்களும், இணைந்து திறந்த கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


குறித்த கடிதத்தில், “அரசு முஸ்லிம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளை கௌரவிக்கவும் பாதுகாக்கவும் பொறுப்புடையது. நீங்கள் செயலற்றவர்களாக இருக்கப் போகின்றீர்களா? 


அண்மையில் வெளிவந்த காணொளி ஒன்றில், அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் (Vijitha Herath), 1951ம் ஆண்டு 13ம் இலக்க முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு எந்தத் தேவையுமில்லை என்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்திருந்தார்.


மேலும் இந்தச் சட்டம் தொடர்பாக கூறப்படும் கருத்துக்களை கருத்துக்களாக மாத்திரம் பார்ப்பதாகவும், கருத்துச் சுதந்திரத்தை மதிப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.


கருத்தாழமற்ற இவருடைய பேச்சினால் முஸ்லிம் விவாவக விவாகரத்துச் சட்டத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள், அச்சட்டத்தை திறுத்தத்திற்கு உள்ளாக்க முயற்சித்துக் கொண்டிருக்கும செயற்பாட்டாளர்கள் மற்றும் புத்திஜீவிகள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


காரணம் வகைப் பொறுப்புக் கூற வேண்டிய ஓர் அரசாங்கத்திடமிருந்து இவ்வாறான கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாது. அரசியலமைப்பு உறுப்புரை 12 உப பிரிவு 1  இலங்கை மக்கள் அனைவரும் சட்டத்தின் முன் சரி சமமானவர்கள் என்று கூறுகின்றது.


அத்துடன் இவ்வடிப்படை உரிமையானது எல்லோரும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றது. இந்த நிலையில் அரசாங்கம் என்ற வகையில் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தை நீதமாக நடைமுறைப்படுத்துவதற்கு அரசியலமைப்பின் படி அரசின் பொறுப்பாகும்.


இந்த அரசியலமைபினூடனான அடிப்படை மனித உரிமை அறிவுறுத்தலானது அரசு ஏற்றுக் கொள்ளாமல் பொறுப்பை அரசாங்கம் மதத் தலைவர்கள் மீது சாட்டுவது அரசு தன் கடமையில் இருந்து விலகுவதாக நாங்கள் கருதுகின்றோம்.


( தேசிய மக்கள் சக்தி) NPP அரசு முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் உள்ள பாரபட்சங்களை சரிகாணும் நிலைப்பாட்டில் இருக்குமாயின் தற்போது அமுலில் இருக்கும் இந்த பாராபட்சமான சட்டத்தின் குறைபாடுகளால் ஏற்படுகின்ற பாரதூரமான விளைவுகளைக் கட்டுப்படுத்துவதற்கு என்ன முறைமைகளைக் கையாளப் போகின்றது?


மேற்குறித்த அரசியலமைப்பு கோட்பாடுகளின் பிரகாரம், சமூகத்தில் உள்ள இளவயது திருமணங்களையும், பெண்களுக்கு எதிரான பாரபட்சங்களையும் தடுத்து குடும்ப வாழ்வுகளைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையாகும்.

No comments

Powered by Blogger.