Header Ads



நீரிழ் மூழ்கிய பல ஏக்கர், நெற் செய்கை வயல் நிலங்கள்


- ஹஸ்பர் -


சீரற்ற கால நிலையின் காரணமாக தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் உள்ள பல ஏக்கர் வயல் நிலங்கள் நீரிழ் மூழ்கி நெற் செய்கை பாதிக்கப்பட்டுள்ளது. 


தொடர் கன மழை காரணமாக தம்பலகாமம் கோயிலடி பகுதியை அண்டிய வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளது இதனால் நெற் செய்கை முழுமையாக அழிவடைந்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இது தவிர தொடர் அடை மழை காரணமாக தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியில் தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன குறிப்பாக முள்ளிப்பொத்தானை, மீரா நகர், பாலம் போட்டாறு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் அதிகளவான நீர் தேங்கி நிற்பதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது குறித்த பகுதிகளில் நீரை வெளியேற்ற தம்பலகாமம் பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை இணைந்து பெகோ இயந்திரத்தை கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. பாலம்போட்டாறு கிராம சேவகர் பகுதியில் உள்ள பத்தினிபுர மக்கள் சில குடும்பங்கள் அருகாமையில் உள்ள பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் இவர்களுக்கான சகல ஏற்பாடுகளையும் பிரதேச செயலகம் மேற்கொண்டுள்ளதுடன் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஊடாக ஏனைய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 


குறித்த பகுதியில் போக்குவரத்து மற்றும் தடைப்படும் நீரை வெளியேற்ற சகல நடவடிக்கைகளும் பிரதேச செயலாளரின் வழிகாட்டுதளுக்கிணங்க அனர்த்த முகாமைத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தரும் களத்தில் நின்று கடமையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.