Header Ads



வரலாறு மீள்கிறது..!

 


இஸ்லாமிய ஸ்பெனின் டொலேடோ    (Toledo - طليطلة) மாநகர் கத்தோலிக்க படைகளால், சுமார் ஏழு ஆண்டுகளாக  முற்றுகையிடப்பட்டிருந்தது. 


பின்னர் கடைசியாக டோலேடோ மாநகர முஸ்லிம் அரசர்கள், ஸ்பானியரிகளிடம் சரணடைந்தார்கள். அப்போது டோலேடோ மாநகரின் முஸ்லிம் அரசர்களிடம்:


இத்தனை ஆண்டுகளாக பொறுமை காத்துவிட்டு இப்போது ஏன் சரணடைந்தீர்கள்?" என கேட்கப்பட்டது. 


அதற்கு அவர்கள்: நாம் எமது பக்கத்து முஸ்லிம் சிற்றரசுகளிடமிருந்து ராணுவ உதவிகள் வருமென காத்திருந்தோம்" என பதிலளித்தனர். 


அதற்கு ஸ்பானிய கத்தோலிக்க படைகள்: அந்த அரசர்கள் அனைவரும் உங்களை முற்றுகையிட எங்களுடன் பக்கபலமாக இருந்தனர் " என்று கூறினர். 


டோலிடோ மாநகர் வீழ்ச்சிக்குப் பிறகு, கத்தோலிக்க ஸ்பானியர்கள் முஸ்லிம் ஸ்பைனின் மற்ற இஸ்லாமிய சிற்றரசுகளை ஒன்றன் பின் ஒன்றாக வீழ்த்தி வெற்றி கண்டனர்.


history repeats itself.!

ما أشبه اليوم بالبارحة.!

வரலாறு மீள்கிறது.!



✍ தமிழாக்கம் / imran farook

No comments

Powered by Blogger.