Header Ads



தந்தையின் பிறந்தநாளில் தன் உயிரை, விட நேரிடும் என்று அவள் நினைக்கவில்லை


பதுளை-துன்ஹிந்தவில் நேற்று (01) இடம்பெற்ற பஸ் விபத்தின் பின்னர் பஸ்ஸில் இருந்த மாணவர்கள் உட்பட 41 பேர் காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


அவர்களில் 39 பேர் பதுளை போதனா வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இந்த விபத்தில் 23 வயதுடைய இரண்டு மாணவிகள் உயிரிழந்துள்ளனர்.


சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் நிவிதிகல, தொலபுகமுவ, பஹல கந்தவில் வசித்த இசுரி உமயங்கனா மற்றும் குருநாகல், ஹுனுபொலகெதர, அம்பகொட்டே ஆகிய பகுதிகளில் வசித்து வந்த பூபதி ஹெட்டிமுல்ல ஆகிய இரு மாணவிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.


குறித்த இருவருக்கும் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் பஸ் விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதே மரணத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.


இதற்கிடையில், உயிரிழந்த மாணவிகளில் ஒருவரான இசுரி உமயங்கனா, நேற்று (01) தனது தந்தையின் பிறந்தநாளுக்கு வாட்ஸ்அப்பில் வாழ்த்துச் செய்தி ஒன்றை பதிவிட்டிருந்தார்.


அதிகாலையில் எழுந்த நிலையில், 05.03 மணிக்கு வட்ஸ்அப்பில் அப்பாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


தன் தந்தையின் பிறந்தநாளில் தன் உயிரை விட நேரிடும் என்று அவள் நினைத்துக்கூட பார்க்கவில்லை.


பல்கலைக்கழக களப்பயணத்திற்குத் தயாராக இருந்த அவள் அன்று காலை தன் தந்தைக்கு வாழ்த்துச் சொல்ல மறக்கவில்லை.


மூன்று பெண் குழந்தைகளைக் கொண்ட குடும்பத்தில் இசுரி மூத்த மகள்.


இதேவேளை, சம்பவத்தில் உயிரிழந்த இரு மாணவிகளின் சடலங்களும் பிரேத பரிசோதனையின் பின்னர் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.