Header Ads



முன்னாள் பிரதியமைச்சர் சுமதிபால, பிரதேச முன்னாள் தவிசாளர் கசுன் ACMC இல் இணைவு


முன்னாள் பிரதி அமைச்சர் சுமதிபால மற்றும் வவுனியா சிங்கள பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கசுன் சுமதிபால ஆகியோர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டனர். 


வவுனியா, வெலிஓயா பகுதியில்  இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது, கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் மக்கள் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்கள் முன்னிலையில், இவர்கள் மக்கள் காங்கிரஸுடன் இணைந்துகொண்டனர்.


முன்னாள் பிரதி அமைச்சர் சுமதிபால மற்றும் அவரது மகனான கசுன் சுமதிபால ஆகியோர், கடந்த ஜனாதிபதித் தேர்தலில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



No comments

Powered by Blogger.