Header Ads



6 பில்லியன் KM தொலைவில் எடுத்த புகைப்படமும், அல்குர்ஆனிய கூற்றும்


வாயாஜர் விண்கலம் நம் பூமிக் கிரகத்தை சுமா‌ர் 6 பில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருந்து எடுத்துத் தந்த புகைப்படமே இது.



பிரமாண்டமான பால்வெளியில் தூசி போல் காட்சியளிப்பதுதான் நாம் வாழும் மண்ணுலகம். இந்த சின்னஞ்சிறிய மண் துளி மீதுதான் 800 கோடி மக்கள் பல கோடி பிரச்சினைகளுடன் வாழ்கின்றனர். அதில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆயிரமாயிரம் எண்ணங்கள், நினைப்புகள், கனவுகள், கற்பனைகள், எதிர்பார்ப்புக்கள், தீராத ஆசைகள்.


கற்பனைக்கு எட்டாத இப்பிரபஞ்சத்தின் பிரமாண்டத்தை நாம் உணரும் போது நம் பிரச்சனைகள், போராட்டங்கள், பேராசைகள், கொளரவங்கள் யாவும் வெட்கித்து தலைகுனிந்துவிடும், சிறுமையால் தவிடுபொடியாகிவிடும்.

இத்தகைய அண்டங்களையும் அகிலங்களையும் அடக்கியாளும் அந்த ஆண்டவனுக்கு முன்னால் நாம் சிரம் தாழ்த்தாமல் இருப்பது தகுமா.!


(விண்ணுலகிலும் மண்ணுலகிலும் என்னவெல்லாம் உள்ளன என்று கவனித்துப் பாருங்கள்” என்று (நபியே!) அவர்களிடம் கூறுவீராக; எனினும் விசுவாசம் கொள்ளாத மக்களுக்கு சான்றுகளும் எச்சரிக்கைகளும் பலனளிக்க மாட்டாது) அல்குர்ஆன் : 10:101


வட்சப்பில் இணைவதற்கு 👆


✍தமிழாக்கம் / imran farook

No comments

Powered by Blogger.