மத்ரசா சம்பவம், நினைத்ததையெல்லாம் எழுதாதீர்கள் - 5 கேள்விகள்
பேஸ்புக் போராளிகளே!
அரபுக் கல்லூரி மாணவர்களின் மரணம்.
நீங்கள் நினைத்ததெல்லாம் உங்களது கற்பனைக் கட்டியவாறு தாறுமாறாக எழுதாதீர்கள். இந்த எழுத்துக்கள் எமது சமூகத்தின் ஒரு சாபக்கேடான எழுத்துக்களாக மாறி வருகின்றது. இனவாத ஊடகம் ஒன்று முஸ்லிம் அரபுக் கல்லூரிகளை மோசமான முறையில் வசை பாடத் தொடங்கி விட்டது.
என்ன நடந்தது என்பதை தெளிவாக அறிந்து எழுதுங்கள் மாறாக நீங்கள் விதண்டாவாதங்களைக் கொண்டு எதையும் சாதிக்க முடியாது என்பதை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்.
அரபுக் கல்லூரியில் மாணவர்கள் மாவடி பள்ளி விபத்து சம்பவத்தில் அரபுக் கல்லூரி குறை கூறுவது எந்த வகையிலும் பொருத்தமானது அல்ல ஏனெனில் அரபுக் கல்லூரி எடுத்த முடிவானது ஒரு சரியான மசூரா அடிப்படையில் மாணவர்கள் ஆசிரியர்கள் நிர்வாகத்தினர் பெற்றோர்கள் என அனைவருடைய ஆலோசனையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட தீர்மானம் ஆகும். மசூறா தீர்மானத்தை பிழை காணும் அளவு நீங்கள் மேதாவிகளா?
பெருமழை காரணமாக முன்னர் ஒருபோதும் இல்லாதவாறு நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியின் பள்ளிவாசலினுள் மழை நீர் உட்புகுந்ததுடன்
மாணவர் விடுதி (மூன்றாம் மாடியில் முழுமையாக நீர் ஒழுக்கு ஏற்பட்டது) மற்றும் பாடசாலை பொது கல்வி பிரிவு ஆகியவற்றிலும் நீர் ஒழுக்குகள் பரவலாக காணப்பட்டதுடன் மலசல கூட குழிகளும் நிரம்பி மலசல கூடங்கள் பாவிக்க முடியாத நிலையில் காணப்பட்டது,
அத்துடன் மூன்று மாணவர்கள் மாடிப்படியில் வழுக்கி விழுந்த நிலைமையும் அவதானிக்கப்பட்டது.
இந்த நிலையில் தொடர்ந்து மாணவர்களை பாதுகாப்பாக வைத்திருப்பது சிரமம் என்பதால் மசூறாவின் அடிப்படையில் கல்லூரிக்கு அவசரமாக விடுமுறை வழங்குவது பொருத்தம் என தீர்மானிக்கப்பட்டது.
இதனையடுத்து, மாணவர்களை பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பி வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இது குறித்து அதிபர் whatsapp குழுவின் மூலமும் நேரடியாக தொலைபேசி ஊடாகவும் பெற்றோர்களுக்கு நேற்று காலையிலேயே தெரியப்படுத்தியிருந்தார்,
அதிபர் மற்றும் 3 உஸ்தாத்துமார்கள் மற்றும் இரு பணியாளர்களோடு விசேடமாக வாடகைக்கு அமர்த்தப்பட்ட பேருந்து வண்டி மூலம் மாணவர்கள் தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மாணவர்களின் வதிவிட பிரதேசத்தை பஸ்வண்டி அண்மிக்கின்ற போது அவர்களது பெற்றோர்களுக்கு தொலைபேசி மூலம் மீண்டும் அழைப்பை ஏற்படுத்தி அவர்களை பிரதான வீதிக்கு வரவழைத்து அவர்களிடம் மாணவர்களை ஒப்படைப்பது, என்ற அடிப்படையிலேயே இந்த பயண ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது காரைதீவு சந்தியில் இருந்து சம்மாந்துறை நோக்கி பேருந்து வண்டி பயணிக்க முடியாத நிலையில் அங்கு சேவையில் ஈடுபடுத்தப்பட்ட உழவு இயந்திரத்தின் இழுவை பெட்டியில் ஏற்றப்பட்ட மாணவர்கள் (13) பதின்மூன்று பேர், மாவடிப்பள்ளி தாம்பேதியை கடக்கும் போது உழவு இயந்திரம் தடம் புரண்டு குடைசாய்ந்ததில் ஆறு மாணவர்கள் காணாமல் போயுள்ளனர். அதன் அடுத்த பக்கத்தில் மாணவர்களின் பெற்றோர்கள் நின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இதில் தவறு யாருடையது?
இவ்விடைத்தில் நீங்கள் தனியாக மதரஸாவினை மட்டும் குறை கூறுகின்றீர்கள் . மதரஸாவிலிருந்து பெற்றோர்களின் அனுமதி உடன் அனுப்பி வைக்கப்பட்ட மாணவர்கள் காரைதீவு வரைக்கும் வந்திருக்கின்றார்கள் தானே..
1. அப்படி என்றால் காரைதீவில் இருந்து மாவடிபள்ளி வரைக்கும் உழவு இயந்திரத்தின் மூலம் பயணிகளை ஏற்றி இறக்குவதற்கு அனுமதி கொடுத்தது யார்?
2. அவ்வாறு அனுமதி கொடுக்கப்பட்டிருந்தால் வெள்ளப் பாதுகாப்பு அங்கிகளை (safty jacket)அணியாமல் அவர்களை உழவு இயந்திரத்தில் ஏற்றி இறக்கும் போது அவ்விடத்தில் கடமையிலிருந்து உத்தியோகத்தர்களும் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள?
3. இங்கு முதற் பாதுகாப்பு (Safty first) எனும் விடயத்தில் தவறிழைத்தவர்கள் யார்?
4. அந்த இடம் இப்படியான ஆபத்தான இடம் என்று தெரிந்தும் அந்த மத்ரஸா சிறுவர்களை ஏற்றிச் செல்லும் வரை அந்த இடத்தில் இருந்த அதிகாரிகள் ஏன் மௌனமாக இருந்து அனுமதித்தார்கள்.
5. வழமையாக இப்படியான வெள்ள அனர்த்தங்கள் ஏற்படும் போது கடற்படையின் உதவி கொண்டு தான் நீர் எல்லைகள் கடக்கப்படும் அப்படியாயின் இங்கு ஏன் கடற்படை உதவி ஆரம்பத்திலிருந்து பெறப்படவில்லை.
அந்த பிரதேசத்தில் உயர் அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள், வெள்ள அனர்த்த அதிகாரிகள், இடர் கால சேவை பிரிவினர் ஆகியோர் இந்த விடயத்தில் கவணயீனமாக இருந்துள்ளனர் என்பதே முதன்மை,
எனவே யதார்த்தத்தையும் சட்டத்தையும் புரிந்து கொண்டு பேசினால் சிறப்பாக இருக்கும்.
SAFEER HAMEED (Kashifi)
(LLB, Hons, BA Hons,)
Nintavur.
Post a Comment