ஆழ்கடலில் விசேட தேடுதல் - 40 கிலோ ஹெரோயினுடன் பிடிபட்ட படகு
இலங்கை கடற்படையினர் ஆழ்கடலில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பல நாள் மீன்பிடிப் படகொன்றை கைப்பற்றியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு மேற்கே சுமார் 110 கடல் மைல் (200 கி.மீ) தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் நேற்று (16) இந்த விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கடற்படையினர் 5 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதுடன், பல நாள் மீன்பிடிப் படகில் 40 கிலோ போதைப்பொருள் கையிருப்பு இருந்ததாக கடற்படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
படகு மற்றும் சந்தேக நபர்கள் தற்போது மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்படையினரால் கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.
Post a Comment