Header Ads



உரிமையாளர் இன்றி இருந்த பொதியில் 3 கோடி ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள்


கட்டுநாயக்க விமான நிலைய இறக்குமதி முனையத்திற்கு விமான தபால் சேவையின் ஊடாக கொண்டு வரப்பட்ட பொதியொன்று உரிமையாளர் இன்றி காணப்பட்டுள்ளது.


டுபாயிலிருந்து கொண்டு வரப்பட்ட அந்த பொதிக்குள் சுமார் மூன்று கோடி ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் இருந்தமையை, இலங்கை சுங்கத்தின் தகவல் மற்றும் தொழில்நுட்ப பிரிவின் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.


கடந்த ஜூலை மாதம் 13ஆம் திகதி மட்டக்குளிய பிரதேசத்தில் உள்ள போலி முகவரிக்கு கணினி உபகரணங்கள் எனக் குறிப்பிட்டு இந்த பொதி அனுப்பப்பட்டுள்ளது.


கட்டுநாயக்க விமான நிலைய இறக்குமதி விமான சரக்கு முனையத்திற்கு இதுவரை எந்தவொரு உரிமையாளரும் வராததால், அதிகாரிகள் பொதியை திறந்து சோதித்துள்ளனர்.


குறித்த பொதியில் 08 பெட்டிகளில் அடைக்கப்பட்டிருந்த 160,000 வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட மன்செஸ்டர் சிகரெட்டுகள் சுங்க அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.