இன்று பிசியாக இருந்த பாராளுமன்றம் - 200 Mp க்கள் பங்கேற்பு
பத்தாவது பாராளுமன்றத்தின் முதல் அமர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை எளிதாக்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தகவல் கருமபீடம்' நேற்றும், இன்றும் நடைபெற்றது.
ஒன்லைன் முறைமையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் தகவல்கள் பெறப்பட்டன
இதில் முதல் தடவையாகப் பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் உள்ளிட்ட 200ற்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இங்கு உறுப்பினர்களுக்குத் தேவையான தகவல்கள் மற்றும் ஆவணங்கள் வழங்கப்பட்டதுடன், பாராளுமன்ற உறுப்பினர்களின் அடையாள அட்டைக்கான புகைப்படங்களை எடுத்தல் மற்றும் இலத்திரனியல் வாக்களிப்பு நோக்கத்திற்காக கைரேகைகளை பெறுதல் போன்ற விடயங்கள் முன்னெடுக்கப்பட்டன.
Post a Comment