Header Ads



உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் - 2 பேருக்கு விளக்கமறியல், 2 பேர் விடுதலை



 - பாறுக் ஷிஹான் -


நிந்தவூர் அரபு மத்ரஸாவின் அதிபர் மற்றும் ஆசிரியர் ஆகியோருக்கு டிசம்பர்  2ஆம் திகதி வரை விளக்கமறியல்


கைது செய்யப்பட்ட நிந்தவூர் அரபு மத்ரஸாவின் அதிபர் மற்றும் ஆசிரியர் ஆகியோரை  டிசம்பர்  2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் ஏனைய 2 பேரை 1 இலட்சம் ருபா பிணையில் செல்லுமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.


அம்பாறை காரைதீவு மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொறுப்பதிகாரி தலைமையில்  விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் நிந்தவூர் மதரசா அதிபர்  ஆசிரியர் மற்றும் உதவியாளர்கள் இருவரும் வியாழக்கிழமை (28)  கைது செய்யப்பட்டனர்.


சந்தேகநபர்களை   சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வாக்குமூலம் பெற்ற பின்னர்  சம்மாந்துறை  சம்மாந்துறை  நீதிமன்ற பதில் எம்.ரி சபீர் அகமட்  முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.


இதன் போது மத்ரஸாவின் அதிபர் மற்றும் ஆசிரியர் ஆகியோருக்கு எதிர்வரும் டிசம்பர் 2 ஆந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் ஏனைய 2 உதவியாளர்களும் தலா 1 இலட்சம் ரூபா வீதம் சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

No comments

Powered by Blogger.