Header Ads



பொலிஸாரின் 192,400 ரூபா வவுச்சர்களை மோசடி செய்த பெண் பொலிஸ் பொறுப்பதிகாரி கைது


- இஸ்மதுல் றஹுமான் -


     நீர்கொழும்பு பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு உத்தியோகத்தர்களின் 13 வவுச்சர்களை போலி கையொப்பம் இட்டு 192,400 ரூபாவை மோசடி செய்த பொலிஸ் நிர்வாகப் பிரிவின் பெண் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.


   குறித்த பெண் பொறுப்பதிகாரி அவரது கணவரின் இளைய சகோதரரின் வீட்டில் மறைந்திருந்த போது நீர்கொழும்பு விஷேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரினால் கைது செய்யப்பட்டார்.


     நீர்கொழும்பு பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் உத்தியோகத்தர்களுக்கு 06 மாதத்திற்கு ஒரு முறை வழங்கும் அன்பளிப்பு கொடுப்பணவுக்கான வவுச்சர்களை இந்த பெண் பொறுப்பதிகாரி மோசடி மூலம் பெற்றுள்ளார். 


    மேலும் பதில் கடமை புரியும் நீர்கொழும்பு பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரிக்கு கிடைக்குப் பெற்ற அன்பளிப்பு கொடுப்பணவுத் தொகையையும் இவர் பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.


   கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்ற பிரதான நீதிபதி ரக்கித அபேசிங்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் விடுவித்த நீதவான் வழக்கை 2025 மார்ச் மாதம் 21 ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.


தற்போது தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள இப் பெண் அதிகாரி தொடர்பாக பொலிஸ் ஒழுக்காற்று விசாரணையும் இடம்பெறுகின்றது.

No comments

Powered by Blogger.