ஒக்டோபர் மாதம் சுற்றுலாத்துறை மூலம் 185.6 மில்லியன் டொலரை ஈட்டிய இலங்கை
கடந்த ஒக்டோபர் மாதம் சுற்றுலாத்துறை மூலம் இலங்கை 185.6 மில்லியன் டொலரை ஈட்டியுள்ளது.
அதன்படி இவ்வருடம் ஜனவரி முதல் ஒக்டோபர் வரையிலான 10 மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் ஈட்டிய மொத்தத் தொகை 2533.7 மில்லியன் டொலராகும்.
கடந்த வருடத்தின் (2023) முதல் 10 மாதங்களில் 1593.4 மில்லியன் சுற்றுலா வருமானத்துடன் ஒப்பிடுகையில் இது 59% வளர்ச்சியாகும்.
இந்த பின்னணியில், 2024 நவம்பர் மாதம் முதல் 5 நாட்களில் மாத்திரம் 30,620 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதனுடன், 2024 இல் இதுவரை இலங்கைக்கு வந்துள்ள மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,651,335 ஆக அதிகரித்துள்ளது.
நவம்பர் முதல் 5 நாட்களில், இந்தியாவில் இருந்து அதிக பட்சமாக 7,785 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் ரஷ்யாவிலிருந்து வந்துள்ளனர். அதன் எண்ணிக்கை 4,488 ஆகும்.
அதன் பின்னர் ஜேர்மனி, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, சீனா ஆகிய நாடுகளிலிருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
Post a Comment