வயிற்றிலிருந்து 13 மில்லியன் ரூபா பெறுமதியான அழிவுப் பொருட்கள் மீட்பு
- இஸ்மதுல் றஹுமான் -
சியாரா லியோனில் இருந்த வந்த விமானப் பயணின் வயிற்றில் 13 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கேய்ன் போதை வில்லைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
துருக்கி விமான சேவைக்கு சொந்தமான TK 730 விமானத்தில் இஸ்தான்புல் ஊடாக 32 வயதான இவர் இலங்கைக்கு வந்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் "கிரீன் செனல்" ஊடாக பயணி வெளியே வரும்போது சந்தேகம் கொண்ட விமான நிலைய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் பயணியை தடுத்து விசாரணை செய்துள்ளனர்.
சியரா லியோன் நாட்டைச் சேர்நத பயணியை சந்தேகத்தில் கைது செய்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சுங்க பகுதியில் உள்ள உடல் ஸ்கேனர் மூலம் சந்தேக நபரை பரிசோதனை செய்த போது உடலில் போதைப் பொருளை மறைத்து வைத்திருப்பதை அடையாளம் கண்டனர்.
சந்தேக நபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவரது வயிற்றிலிருந்து கொக்கேன் போதைப்பொருள் அடங்கிய 17 வில்லைகள் வெளியேற்ற ப்பட்டன. இதன் தந்தைப் பெறுமதி 13 மில்லியன் ரூபாவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
வில்லைகளையும் சந்தேக நபரையும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தில் ஒப்படைத்தனர்.
Post a Comment