Header Ads



அட்டகாசமான 10 அறிவிப்புக்களை வெளியிட்டுள்ள ஹேஷா விதான


புதிய பாராளுமன்றம் கூடியதன் பின்னர் உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை நீக்குவதற்கான தனிப்பட்ட உறுப்பினர் பிரேரணையை கொண்டு வரவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து பாராளுமன்றிற்கு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதான தெரிவித்துள்ளார்.


புதிய ஜனாதிபதி உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தியை பலப்படுத்தும் நோக்கில் இந்த புதிய கலாசாரம் கொண்டுவரப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,


"எங்களுக்கும் சில சலுகைகள் பிடிக்கவில்லை. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் காலை, மதிய உணவை நிறுத்துங்கள். தேவைப்பட்டால் வீட்டில் இருந்து கொண்டு வருவோம்."


"குறைந்த வட்டியின் கீழ் வழங்கப்படும் 10 மில்லியன் கடனை முற்றிலுமாக நிறுத்தவும்."


"அனைத்து எம்.பி.க்கள் மற்றும் அமைச்சரவை, அமைச்சர்களின் பாதுகாப்பை நிறுத்தவும்."


"அமைச்சர்களுக்கு கொழும்பு  வாசஸ்தளம் வழங்கப்பட்டால் வாடகை அடிப்படையில் வழங்கவும். அந்த பணத்தை மஹாபொல நிதிக்கு வழங்கவும்."


"அலுவலகம் ஒன்றிற்காக வழங்கப்படும் ஒரு இலட்ச ரூபாய் தொகை தேவையில்லை."


" பாராளுமன்ற உறுப்பினரின் அடிப்படைச் சம்பளம் 54,285 ரூபாய். அதுவும் வேண்டாம் என்றால் இதை கௌரவமான சேவையாகச் செய்யுங்கள். வாகன கொடுப்பனவு உட்பட அனைத்தையும் நிறுத்துங்கள்."


"பல்கலைக்கழக மாணவர்களுக்கான விடுதி வசதியாக மாதிவெல பாராளுமன்ற உறுப்பினர் இல்லங்கள் வழங்கப்பட வேண்டும்."


" 10 இலட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகையை நிறுத்துங்கள்."


"ஓய்வூதியத்தை இரத்து செய்யவும்."


"எம்.பி.க்களின் பிரபுத்துவத்தை ஒழிக்க வேண்டும்."


"இதை 21ம் திகதிக்கு முன்னரே ஆரம்பிக்கவும், ஏனென்றால் 21ம் திகதி வீட்டிற்கான விண்ணப்பம் கொடுத்த பிறகு இதை செய்ய முடியாது. அதனால் தற்போதே ஆரம்பிக்கவும்."

No comments

Powered by Blogger.