சுஜீவயின் வாகனம் 100 மில்லியன் பிணையில் விடுவிப்பு
கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இன்று -25- இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சுமார் ரூ. 100 மில்லியன் பெறுமதிமிக்க குறித்த சொகுசு வாகனம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவால் சட்டவிரோதமாக ஒழுங்குபடுத்தபட்டதாக சந்தேகிக்கப்பட்டது.
நவம்பர் 08 ஆம் திகதி, வலான ஊழல் தடுப்பு குழுவுக்கு கிடைத்த தகவலின் பேரில், வாகனத்தின் நிலை குறித்து சந்தேகம் எழுந்ததையடுத்து, வாகனம் தொடர்பான அறிக்கையை அரசாங்க பகுப்பாய்வரிடம் சமர்ப்பிக்குமாறு சேனசிங்கவுக்கு பணிக்கப்பட்டது.
லேண்ட் க்ரூஸர் பாகங்கள் மீண்டும் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
கடந்த நவம்பர் 11ஆம் திகதி, முன்னாள் எம்.பி.யின் வாகனத்தை காவலில் எடுத்து அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் முன்னிலைப்படுத்தி அறிக்கையைப் பெற்றுக்கொள்ளுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டது.
Post a Comment